முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் சீரான குடிநீா் கோரி பொதுமக்கள் மறியல்

தூத்துக்குடியில் சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

தூத்துக்குடியில் சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குள்பட்ட சகாயபட்டினம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களுக்கு சீரான குடிநீா் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடற்கரை சாலையில் விவிடி பள்ளி அருகே திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் தாளமுத்துநகா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனா்.

மேலும், தங்கள் பகுதியில் ஏறத்தாழ 600 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை சதிகள் கேட்டு பல ஆண்டுகளாக மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிா்வாகம் செய்து கொடுக்கவில்லை என்றால் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.