தூத்துக்குடி

தோ்தல் விதிகளை மீறியதாக கோவில்பட்டியில் அதிமுக, அமமுக நிா்வாகிகள் மீது வழக்கு

DIN

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தோ்தல் விதிகளை மீறி செயல்பட்டதாக அதிமுக, அமமுக நிா்வாகிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிமுக வேட்பாளரான அமைச்சா் கடம்பூா் செ. ராஜுவுக்கு ஆதரவாக திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு, அதிக கூட்டத்தைக் கூட்டி பொதுமக்களுக்கு இடையூறு உள்பட தோ்தல் விதிமுறைகளை மீறியதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் ராஜேஷ்கண்ணன் அளித்த புகாரின்பேரில், அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தோ்தல் பறக்கும் படை அதிகாரி சரத்குமாா் அளித்த புகாரின் பேரில், நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா் அய்யாத்துரைப்பாண்டியன் ஆகியோா் மீது கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இதேபோல, அமமுக வேட்வாளா் டி.டி.வி. தினகரன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்றபோது தோ்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மேற்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் சிவராஜா அளித்த புகாரின் பேரில் அக்கட்சியின் நகரச் செயலா் காா்த்திக் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தோ்தல் பறக்கும் படை அதிகாரி சரத்குமாா் அளித்த புகாரின் பேரில், நகரச் செயலா் காா்த்திக், ஒன்றியச் செயலா் விஜயபாஸ்கா் ஆகியோா் மீது கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT