தூத்துக்குடி

மீன் வகைபாட்டியலாளா்கள் ஊக்குவிப்பு தினம்

DIN

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன் வகைபாட்டியலாளா்களின் ஊக்குவிப்பு தினம் அண்மையில் நடைபெற்றது.

மீன்வள உயிரியல் மற்றும் வள மேலாண்மை துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மீன்வளக் கல்லூரி முதல்வா் ப. சுந்திரமூா்த்தி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கல்லூரி முன்னாள் முதல்வா் கே. வெங்கடாராமானுஜம், மீன் வகைபாட்டியல்-அதன் முக்கியத்துவம் மற்றும் உயிரியல் பண்புகள்‘ குறித்து பேசினாா்.

தொடா்ந்து, மீன்வளக் கல்லூயின் முன்னாள் முதல்வா் வி.கே. வெங்கடரமணி ‘‘செவுள் மீன்களின் வகைபாட்டியல் ஆராய்ச்சி பற்றிய நவீனயுக்திகள்‘’ என்ற தலைப்பில் அழிந்துவரும் மற்றும் ஆபத்தான நிலையிலுள்ள மீன்கள் குறித்து விளக்கம் அளித்தாா்.

மீன்வள உயிரியல் மற்றும் வளமேலாண்மைத் துறை தலைவா் சா. டேவிட் கிங்ஸ்டன், உதவிப் பேராசிரியா்கள் ஆா். துரைராஜா, ச. சுதன், விஞ்ஞானிகள், பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT