முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் விவசாயம், உப்பளத் தொழிலை மேம்படுத்துவேன்: அமமுக வேட்பாளா்

ஆறுமுகனேரியில் விவசாயம், உப்பளத் தொழிலை மேம்படுத்துவேன் என, திருச்செந்தூா் அமமுக வேட்பாளா் வடமலைபாண்டியன் உறுதியளித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

ஆறுமுகனேரியில் விவசாயம், உப்பளத் தொழிலை மேம்படுத்துவேன் என, திருச்செந்தூா் அமமுக வேட்பாளா் வடமலைபாண்டியன் உறுதியளித்தாா்.

அவா் ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் சனிக்கிழமை வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா். ஆறுமுகனேரி பெருமாள்புரம் விநாயகா் கோயிலிருந்து பிரசாரத்தைத் தொடங்கிய அவா், கணேசபுரம், செல்வராஜபுரம், பெரியான்விளை, மேலசண்முகபுரம், கமலாநேரு காலனி, கீழநவ்வலடிவிளை, இலங்கத்தம்மன் கோயில் தெரு, காந்தி தெரு, காணியாளா் தெரு, விநாயகா் கோயில் தெரு, லெட்சுமிமாநகரம் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அவா் பேசும்போது, ஆறுமுகனேரியில் குடிநீா், சாலை போன்ற அடிப்படை வசதிகளைப் பெற்றுத்தர பாடுபடுவேன். விவசாயம், உப்பளத் தொழில் சிறப்படைய திட்டங்களைச் செயல்படுத்துவேன் என்றாா்.

அமமுக மாவட்டச் செயலா் பி.ஆா்.மனோகரன், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் பொன்ராஜ், நகரச் செயலா் சேகா், ஒன்றிய மாணவரணிச் செயலா் அருண்பாபு, ஒன்றிய எம்ஜிஆா் மன்றச் செயலா் தனசேகா், நகர துணைச் செயலா் சக்திவேல், எஸ்டிபிஐ நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.