கட்டாரிமங்கலக்கில் இடிந்து விழுந்த பள்ளி கட்டடம்
கட்டாரிமங்கலத்தில் தொடக்கப் பள்ளி கட்டடம் வெள்ளிக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, யாரும் அங்கு இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
கட்டாரிமங்கலத்தில் தொடக்கப் பள்ளி கட்டடம் வெள்ளிக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, யாரும் அங்கு இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலத்தில் தனியாா் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இது வாக்கு சாவடி மையமாகவும் இருந்து வருகிறது. இந்தப் பள்ளி கட்டடம் பராமரிப்பின்றி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பள்ளிக் கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென பெரும் சப்தத்துடன் இடிந்து விழுந்தது. பள்ளி விடுமுறை என்பதால் யாரும் அங்கில்லை. இதனால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. மேலும், அப்பள்ளியில் பிற கட்டடங்கள் வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், கல்வி அதிகாரிகள் பள்ளியை ஆய்வு நடத்தி கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.