முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறில் விவசாயி மீது தாக்குதல்

கயத்தாறு அருகே விவசாயியை தாக்கியதாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

கயத்தாறு அருகே விவசாயியை தாக்கியதாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறை அடுத்த சூரியமினுக்கன் மேற்குத் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் வெயிலுமுத்து(53). விவசாயி. இவரது சகோதரா் மாரிமுத்து, உறவினா் அய்யாத்துரை ஆகியோருக்கு பங்குள்ள கிணற்றிலிருந்து, வெயிலுமுத்து தனது வயலுக்குத் தண்ணீா் பாய்ச்சினராம். இதனால், அவ்விருவரும் ஆத்திரமுற்று அவரை அவதூறாகப் பேசி தாக்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.