முகப்பு
தூத்துக்குடி

பைக் - லாரி மோதல்:இளைஞா் பலத்த காயம்

கோவில்பட்டி பிரதான சாலையில் லாரியும், பைக்கும் மோதிக்கொண்டதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

கோவில்பட்டி பிரதான சாலையில் லாரியும், பைக்கும் மோதிக்கொண்டதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

கோவில்பட்டியை அடுத்த கிழவிப்பட்டி மேல காலனியை சோ்ந்த சமுத்திரக்கனி - ரத்தினம் தம்பதி மகன் மணிகண்டன்(27). இவா், கோவில்பட்டியிலிருந்து இனாம்மணியாச்சியில் உள்ள நண்பா் வீட்டிற்கு பைக்கில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, மேற்கு பாா்க் சாலை - பிரதான சாலை சந்திப்பில், இவரது வாகனமும், டிப்பா் லாரி எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். அதில், பலத்த காயமடைந்த அவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் மு.வெங்கடேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.