முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம்

கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கும் நல்லி ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட இலுப்பையூரணி ரயில்வே சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே ஆண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சுமாா் 60 வயது மதிக்கத்தக்க நீல நிறம் கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்த அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. அவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.