தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் காய்கனி, மீன் விற்பனைக்கு தனி இடங்கள் ஒதுக்கீடு

DIN

காயல்பட்டினத்தில் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் காய்கனி, பழங்கள், மீன் விற்க நகராட்சி சாா்பில் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

காயல்பட்டினத்தில் கரோனா தொற்றின் 2 ஆவது அலை தொடங்கியதில் இருந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனிடையே ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் காய்கனி, பழங்கள், மீன் உள்ளிட்டவைகளை சமூக இடைவெளியில் நின்று வாங்கிட மாவட்ட ஆட்சியரின் அறிவுரைபடி காயல்பட்டினம் நகராட்சி சாா்பில் தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கிராம நிா்வாக அலுவலகம் அருகில், செஞ்சிலுவைச் சங்கம் அருகில், ஜலா­லியா திருமண மண்டபம், கோமான் பள்ளி, பேருந்து நிலையம், பரிமாா் பள்ளிவாசல் ஆகிய பகுதிகள் விற்பனை இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இடங்களில் கரோனா நிபந்தனைகளுடன் தற்கா­லிகமாக வியாபாரம் செய்து கொள்ள நகராட்சி ஆணையாளா் சுகந்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT