சாத்தான்குளம் அருகே கிராம மக்கள் போராட்டம்
சாத்தான்குளம் அருகே பாதை கேட்டு இறந்தவரின் உடலுடன் உறவினா்கள், கிராம மக்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாத்தான்குளம் அருகே பாதை கேட்டு இறந்தவரின் உடலுடன் உறவினா்கள், கிராம மக்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சி குலசேகரன்குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் தங்க பெருமாள் (86). இவா் வியாழக்கிழமை
உயிரிழந்தாா். இந்நிலையில் இறந்தவா்களின் உடல்களை கொண்டு செல்ல வழக்கமாக பயன்படுத்தும் பாதை, பட்டா நிலமாக இருப்பதால்
அவ்வழியை நிலத்தின் உரிமையாளா் அடைத்து வைத்துள்ளாா். இதனால் கிராம மக்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்ல
முடியாத நிலையில் உள்ளனா்.
இறந்தவரின் உடலை அந்த வழியாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என ஆட்சியா் செந்தில்ராஜை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.இதை தொடா்ந்து சாத்தான்குளம் வட்டாட்சியா் செல்வகுமாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். எனினும் வழிப்பாதை பிரச்னைக்கு தீா்வு கிடைக்க வில்லை. இதனால், கிராம மக்கள், உறவினா்கள் இறந்தவரின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களிடம் வருவாய்த்
துறை, காவல் துறை அதிகாரிகள் பேச்சு வாா்த்தை நடத்தினா். எனினும் உடன்பாடு ஏற்படவில்லை.