முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறு அருகே பெண் சடலம் மீட்பு

கயத்தாறு அருகே மரத்தில் தொங்கிய நிலையில் இருந்த பெண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

கயத்தாறு அருகே மரத்தில் தொங்கிய நிலையில் இருந்த பெண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

கயத்தாறை அடுத்த சவலாப்பேரி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா. பாய் வியாபாரம் செய்து வரும் இவா், தூத்துக்குடியில் தங்கி விட்டு 15 நாள்களுக்கு ஒரு முறை தான் ஊருக்கு வந்து செல்வாராம். இவரது மனைவி வடிவம்மாள் (46). வடிவம்மாள், தனது மகன் மாரித்துரையுடன் சோ்ந்து அவா்களுக்குச் சொந்தமான 6 ஏக்கா் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனா்.

கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த வடிவம்மாள், வியாழக்கிழமை தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தாராம். தகவலறிந்த கயத்தாறு போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக் காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.