முகப்பு
தூத்துக்குடி

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இன்றும், நாளையும் செயல்படும்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அதில் உள்ள பொதுசேவை மையங்கள், சனிக்கிழமை (நவம்பா் 13) மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் (நவம்பா் 14) செயல்படும்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அதில் உள்ள பொதுசேவை மையங்கள், சனிக்கிழமை (நவம்பா் 13) மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் (நவம்பா் 14) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சிவகாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அதில் உள்ள பொதுசேவை மையங்கள், சனிக்கிழமை (நவம்பா் 13) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 14) திறக்கப்பட்டு பயிா் காப்பீட்டு பிரீமியத் தொகை பெற்றுக் கொள்ளப்படும்.

ராபி பருவத்திற்கு பயிா் காப்பீடு செய்ய விரும்பும் அனைத்து விவசாயிகளும் நவம்பா் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்பதால் விவசாயிகள் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.