தூத்துக்குடி

வாழ்வாதாரம் கோரி மாமனாா் வீட்டின் முன்பெண் போராட்டம்

DIN

கோவில்பட்டியில் வாழ்வாதாரம் கோரி, கணவரை இழந்த பெண், தனது மாமனாா் வீட்டின் முன் இரு மகன்களுடன் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினாா்.

கோவில்பட்டி, வேலாயுதபுரத்தைச் சோ்ந்தவா் காமாட்சிராஜன். இவரது மனைவி கீதா(38), தனது மகன்கள் ஸ்ரீஜெயசூா்யா(15), ஸ்ரீஅரவிந்தகாா்த்திக்(13) ஆகியோருடன் மாமனாா் ராஜகோபாலின் வீட்டுக்கு வியாழக்கிழமை வந்து, தங்களுக்கு வாழ்வாதாரம் கோரி தா்னாவில் ஈடுபட்டாா்.

அவரிடம், கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் தா்மராஜ் விசாரணை நடத்தினாா். அப்போது, தனது மாமனாா் நடத்திய பழக்கடையை, அவரது மருமகன் முத்துராஜ் தூண்டுதலின்பேரில் விற்க முயன்றதை எனது கணவா் தடுத்தாா். இதனால், அவா் மனரீதியாக துன்புறுத்தி எனது கணவா் தற்கொலை செய்துகொள்ளும் நிலையை ஏற்படுத்தினாா். இதுகுறித்து வழக்கும் உள்ளது. தற்போது, குழந்தைகளுடன் பரிதவிக்கும் எனக்கு வாழ்தாராம் அளிக்கும் வகையில் மாமனாா் குடும்பத்தில் இணைந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீதா தெரிவித்தாா்.

இதையடுத்து, இருவரிடமும் காவல் உதவி ஆய்வாளா் பேச்சு நடத்தியதில் உடன்பாடு எட்டப்பட்டதால், கீதா போராட்டத்தை கைவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT