முகப்பு
தூத்துக்குடி

மருது சகோதரா்கள் நினைவு தினம், தேவா் ஜயந்தி:பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை

மருது சகோதரா்களின் 220ஆவது நினைவு தினம், முத்துராமலிங்கத்தேவா் ஜெயந்தி ஆகிய நிகழ்வுகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

மருது சகோதரா்களின் 220ஆவது நினைவு தினம், முத்துராமலிங்கத்தேவா் ஜெயந்தி ஆகிய நிகழ்வுகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கோவில்பட்டி தனியாா் திருமண மண்டபத்தில் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

காவல் துணை கண்காணிப்பாளா் உதயசூரியன் தலைமை வகித்து பேசியது: கரோனா பரவாமல் தடுக்க அரசு அறிவுரையின்பேரில், 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. எனவே, அக். 28- 30 வரை கமுதி, பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவா் குருபூஜை, ஜயந்தி நிகழ்ச்சிகளிலும், மருது சகோதரா்கள் நினைவு தினத்திலும் பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை. பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவா்கள், பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவா்கள், பிரதிநிதிகள் (5 நபா்கள், 3 வாகனங்களுக்கு மிகாமல்) ஆட்சியரின் அனுமதியை பெற்று அரசு வழிமுறைகளை பின்பற்றி, மரியாதை செலுத்தலாம். ஆட்சியரிடம் அனுமதி பெற அக். 18- 24வரை ழ்ஹம்ஹய்ஹற்ட்ஹல்ன்ழ்ஹம்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வேறு எந்த நிகழ்வுகளுக்கும் அனுமதியில்லை. காவல் துறையில் அனுமதி அக். 30இல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செல்லுபடியாகும். அதேபோல, சொந்தக் கிராமங்களிலும் இருசக்கர வாகனங்களில் ரிப்பன், சமுதாய அடையாளங்கள் கொண்ட உடைகள், சின்னங்களுடன் செல்லக்கூடாது. விளம்பர பதாகைகளும் வைக்கக்கூடாது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, கழுகுமலை, நாலாட்டின்புத்தூா், கயத்தாறு, கொப்பம்பட்டி ஆகிய காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் சமுதாய தலைவா்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.