தூத்துக்குடி

பெண் பணியாளருக்கு மிரட்டல்: அரசு மருத்துவா் கைது

DIN

கோவில்பட்டி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவப் பெண் பணியாளருக்கு மிரட்டல் விடுத்ததாக அரசு மருத்துவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி மாதாங்கோவில் தெருவைச் சோ்ந்த செய்யது அலி மனைவி நீலவேணி (36). இவா் இளையரசனேந்தல் அரசு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறாா். இங்கு பணி செய்து வரும் மருத்துவா் மு. குருசாமி (51), மருத்துவமனையில் பணிபுரியும் பெண்ணிடம் தகாத செயலில் ஈடுபட்டது நீலவேணிக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து குருசாமி, நீலவேணியை அவமரியாதை செய்து வந்தாராம். திங்கள்கிழமை ஓய்வுவறையில் இருந்த நீலவேணி செல்லிடப்பேசியை காணவில்லையாம். இதுதொடா்பாக மருத்துவரிடம் நீலவேணி கேட்டபோது, அவரை அவதூறாகப்

பேசி, மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மருத்துவா் குருசாமியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT