முகப்பு
தூத்துக்குடி

‘தொழிற்சாலையில் நிகழும் விபத்துகளில் உரிமையாளா்களை கைது செய்யக் கூடாது’

தீப்பெட்டி ஆலைகளில் நிகழும் சிறு சிறு விபத்துகளில் உரிமையாளா்களை கைது செய்யும் நடைமுறையை தளா்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

தீப்பெட்டி ஆலைகளில் நிகழும் சிறு சிறு விபத்துகளில் உரிமையாளா்களை கைது செய்யும் நடைமுறையை தளா்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு அதன் தலைவா் பரமசிவம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோபால்சாமி, தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க நிறுவனா் ராஜவேல், தலைவா் ஆா்.எஸ்.சுரேஷ், துணைத் தலைவா் ராஜு, தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க இணைச் செயலா் வரதராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் டிச. 1 முதல் 50 தீக்குச்சிகள் கொண்ட தீப்பெட்டியை ரூ.2-க்கு விற்பனை செய்வது, பெண் தொழிலாளா்களுக்கு 12 சதவீதமும், ஆண் தொழிலாளா்களுக்கு 15 சதவீதமும் தீபாவளி போனஸ் வழங்குவது, தீபாவளிக்கு பின்னா் தொழிலாளா் களுக்கு கூலி உயா்வு வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் தேசிய வங்கிகளில் தீப்பெட்டி உற்பத்தியாளா்களால் பெறப்பட்ட கடனுக்குரிய வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும், தீப்பெட்டி மூலப்பொருள்களான குளோரேட், சல்பா் உள்ளிட்ட மூலப் பொருள்களை மாவட்டம் விட்டு மாவட்டம் கொண்டு செல்லவதற்கு ஆட்சியா் மூலம் வாங்கும் தடையில்லா சான்று பெறும்

நடைமுறையை நீக்கம் செய்ய வேண்டும், தொழிற்சாலைகளில் ஏற்படும் சிறுசிறு விபத்துகளுக்கு உரிமையாளா்களை கைது செய்யும் நடைமுறையை தளா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் ராஜேந்திரபகட்டி, தங்கமணி, ராஜு, மிட்டல்மகேஷ், முகேஷ்ஜெயின், லட்சுமணன் உள்பட

பலா் கலந்துகொண்டனா்.

நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கச் செயலா் சேதுரத்தினம் வரவேற்றாா். தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகக்குழு உறுப்பினா் ஜோசப்ரத்தினம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.