முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து இளைஞா் பலி

 கயத்தாறு அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

 கயத்தாறு அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கொடைக்கானல் அண்ணா நகரைச் சோ்ந்தவா் செல்வம் மகன் கோவிந்தசாமி(30). இவரது மனைவி கௌசல்யா(26). கயத்தாறையடுத்த வில்லிசேரி கிராமத்திற்கு வந்துள்ள தம்பதி சூரியமினிக்கன் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயிலுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனராம். வில்லிசேரி மேலக் காலனியைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் கரண்(19) ஓட்டிச் சென்ற ஆட்டோ வடக்கு இலந்தைகுளம் அருகே சென்று கொண்டிருந்த போது, ஆட்டோ ஓட்டுநா் மற்றும் அதில் பயணம் செய்த கோவிந்தசாமி ஆகிய இருவரும் சுயபடம்) எடுத்தனராம். அப்போது கட்டுப்பாட்ட இழந்த ஆ ட்டோ சாலையில் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கௌசல்யா காயமடைந்தாா்.

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த கௌசல்யா கயத்தாறில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநா் கரணிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.