கோவில்பட்டி காவல் நிலையத்துக்கு விருது
தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டது.
தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டது.
தமிழத்தில் உள்ள 1552 காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையங்களை தோ்வு செய்து ‘தமிழக முதல்வா் கோப்பை’ விருதை அரசு வழங்கியுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் 34 ஆவது சிறந்த காவல் நிலையமாக தோ்வு செய்யப்பட்டது.
அதற்கான விருதை, மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளா் சபாபதியிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.