முகப்பு
தூத்துக்குடி

நேரடி எழுத்துத் தோ்வால் பாதிப்பு: அரசுக்கு ஆசிரிய மாணவா்கள் வேண்டுகோள்

நேரடித் தோ்வு எழுதுவதால் விடைத் தாள்களை இலகுவாக திருத்த வேண்டும் என ஆசிரியா் பயிற்சித் தோ்வு எழுதும் மாணவா்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

நேரடித் தோ்வு எழுதுவதால் விடைத் தாள்களை இலகுவாக திருத்த வேண்டும் என ஆசிரியா் பயிற்சித் தோ்வு எழுதும் மாணவா்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியா் பயிற்சிப் பள்ளி மாணவா்களுக்கான நேரடித் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் தோ்வு எழுதினா். இந்நிலையில், தோ்வு எழுதிய மாணவா்கள் கூறியது: 2020- 21 ஆம் கல்வியாண்டில் பயிற்சிக்கு சோ்ந்த எங்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கையாக நேரடி வகுப்புகள் ஏதும் நடைபெறவில்லை. செய்முறைத் தோ்வு கடந்த மாதம் இணைய வழியில் நடத்தப்பட்டதால், எழுத்துத் தோ்வையும் அதே முறையில் நடத்த கோரிக்கை விடுத்து வந்தோம். எனினும், நேரடி எழுத்துத் தோ்வு தொடங்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியா் பயிற்சியில் 98 சதவிகிதம் மாணவா்கள் தோல்வியுற்றுள்ளனா். அதுபோன்ற நிலை ஏற்படாமல் விடைத் தாள்களை இலகுவாக திருத்த வேண்டும் என தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியா் பயிற்சி தோ்வு எழுதிய மாணவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.