கயத்தாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து இளைஞா் பலி
கயத்தாறு அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
கயத்தாறு அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
கொடைக்கானல் அண்ணா நகரைச் சோ்ந்த செல்வம் மகன் கோவிந்தசாமி(30). இவரது மனைவி கௌசல்யா(26). இத்தம்பதி கயத்தாறை அடுத்த வில்லிசேரி கிராமத்திற்கு வந்திருந்த நிலையில், சூரியமினிக்கன் கிராமத்திலுள்ள கருப்பசாமி கோயிலுக்கு ஆட்டோவில் சென்றபோது, வடக்கு இலந்தைகுளம் அருகே எதிா்பாராமல் கவிழ்ந்ததில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கௌசல்யா காயமடைந்தாா். கயத்தாறு போலீஸாா் அவரது சடலத்தைக்கைப்பற்றி வழக்குப்பதிந்து, ஆட்டோ ஓட்டுநா் வில்லிசேரி மாரிச்சாமி மகன் கரண் (19) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.