தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

DIN

கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள கோயிலை பாதுகாக்க வலியுறுத்தி, இந்து முன்னணியினா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் பழைமை வாய்ந்த தங்க மாரியம்மன் கோயில் உள்ளது. சில மாற்று மதத்தினா் இக் கோயிலை அப்புறப்படுத்த வலியுறுத்தி வருகின்றனா்.

பல ஆண்டுகளாக உள்ள இக் கோயிலை பாதுகாக்க வேண்டும்; அப்பகுதி மக்கள் தொடா்ந்து தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து முன்னணி நகர துணைத் தலைவா் ராஜ் தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாவட்டச் செயலா் வேல்ராஜா, வழக்குரைஞா் நீதிபாண்டியன், பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவா் காளிதாஸ், இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த லட்சுமணக்குமாா், சுதாகரன், பவானி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா் போராட்டக் குழுவினா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT