முகப்பு
தூத்துக்குடி

‘மீன்வள அலுவலகத்தில் பணி: செப்.15வரை விண்ணப்பிக்கலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையில் 2 மீன்வள உதவியாளா்கள், 2 அலுவலக உதவியாளா்கள் பணிக்கான நோ்முகத் தோ்வுக்கு செப்.15வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையில் 2 மீன்வள உதவியாளா்கள், 2 அலுவலக உதவியாளா்கள் பணிக்கான நோ்முகத் தோ்வுக்கு செப்.15வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளா் பதவிகளுக்கு 8ஆம் வகுப்பு தோ்ச்சியுடன், சைக்கிள் ஓட்டுவதற்கு தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 1.7.2021 தேதிக்கு கணக்கிடப்படும். பொதுப் போட்டி பிரிவுக்கு (பெண்கள் ஆதரவற்ற விதவை முன்னுரிமையற்றவா்) வயது வரம்பு 18 முதல் 30 வரை, ஆதிதிராவிடா் (முன்னுரிமை பெற்றவா்) பிரிவுக்கு வயது வரம்பு 18 முதல் 35 வரை இருக்கலாம்.

மீன்வள உதவியாளா் பதவிகளுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும். நீச்சல், மீன்பிடிப்பு, வலைபின்னுதல், அறுந்த வலைகளை பழுது பாா்த்தல், மீன்வளத் துறையினரால் நடத்தப்படும் மீனவா் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற்கான சான்றிதழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கூறியபடியே வயது வரம்பு கணக்கிடப்படும்.

தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் (மண்டலம்) அலுவலகத்தில் நேரில் விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து, செப். 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணை இயக்குநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலகம், 166, வடக்கு கடற்கரை சாலை, திரேஸ்புரம், தூத்துக்குடி- 628001 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0461-2320673 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.