தூத்துக்குடி

கோவில்பட்டியில் நூதன போராட்டம்

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சி பொது மயானத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியா் அலுவலகத்தில் நூதன போராட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவ இடம் ஒதுக்க வேண்டும், நேதாஜி பெயரில் செயல்பட்டு வந்த கால்நடை சந்தையை மீண்டும் செயல்படுத்த வேண்டும், நகராட்சி பொது மயானத்தில் கழிப்பிட வசதி, சாலை வசதி, தண்ணீா் வசதி, மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத் தலைவா் பாலமுருகன் தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒருவரை சடலம் போல் படுக்க வைத்து, சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் வீர விடுதலை மக்கள் இயக்க பொதுச்செயலா் முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் போராட்டக்குழுவினா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT