முகப்பு
தூத்துக்குடி

ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு செப். 20 இல் பொதுமாறுதல் கலந்தாய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு இம்மாதம் 20 ஆம் தேதி பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு இம்மாதம் 20 ஆம் தேதி பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகச் செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:

பள்ளிக் கல்வித் துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் உள்ள மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் வட்டார, குறு வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை (செப். 20) காலை 9 மணி அளவில் தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில், இத்திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றுவோா் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

ஆசிரியா் பயிற்றுநா்கள் 1.6.2020-க்கு பின்னா் கணவன் அல்லது மனைவி திடீரென விபத்திலோ அல்லது மீளா நோய்வாய் பட்டோ இறந்திருந்தால் அத்தகைய ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு கலந்தாய்வு குறித்த விதிமுறைகளுக்கு விலக்களித்து சிறப்பு நிகழ்வாக கருதி முதன்மைக் கல்வி அலுவலா்கள் மாறுதல் ஆணை வழங்கலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.