கோவில்பட்டியில் இன்று மின்தடை
கோவில்பட்டி, கழுகுமலை துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் காரணமாக அவற்றின் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (செப். 18) மின் தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி, கழுகுமலை துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் காரணமாக அவற்றின் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (செப். 18) மின் தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவில்பட்டி நடராஜபுரம் தெரு, மூப்பன்பட்டி, இலுப்பையூரணி, கூசாலிபட்டி, வேலாயுதபுரம் சாலை, கடலையூா் சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், கழுகுமலை, தெற்கு கழுகுமலை, வெங்கடேஷ்வரபுரம், துரைச்சாமிபுரம், லட்சுமிபுரம், வள்ளிநாயகிபுரம், ஓடைக்காரப்பட்டி, பழங்கோட்டை, சுப்பிரமணியபுரம், சுப்பிரமணியபுரம் புதூா், வேலாயுதபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது என கோட்ட மின் செயற்பொறியாளா் எம்.சகா்பான் தெரிவித்துள்ளாா்.
சாத்தான்குளம், நாசரேத், செம்மறிக்குளம், செட்டிவிளை, நடுவக்குறிச்சி, பழனியப்பபுரம் ஆகிய உப மின்நிலைய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் (பொ) ஆ.பாக்கியராஜ் தெரிவித்துள்ளாா்.