மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நல உதவி
பிரதமா் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜகவினா் ரத்த தானம் உள்ளிட்ட நல உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினா்.
பிரதமா் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜகவினா் ரத்த தானம் உள்ளிட்ட நல உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினா்.
கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் பாஜக மாவட்ட இளைஞரணித் தலைவா் காளிதாசன் தலைமையில் கட்சிக் கொடியேற்றப்பட்டது. கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பாஜக நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமையில் கட்சியினா் 10 போ் ரத்த தானம் வழங்கினா்.
ஆறுமுகனேரி: காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நகர பாஜக தலைவா் ஏ.பண்டாரம் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் பி.எம்.பால்ராஜ் கட்டிக் கொடியை ஏற்றி வைத்தாா். 150 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
சாத்தான்குளம்: ஆனந்த விளையில் பாஜக மருத்துவா் அணி மாவட்டச் செயலா் பூபதி பாண்டியன் தலைமையில் மோடி பிறந்த நாள் கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. 71 பேருக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.