தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் 2 ஆண்டுகளில் திருப்பதி போல் மாற்றம்

DIN

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலை 2 ஆண்டுகளில் திருப்பதி கோயில் போல் மாற்றம் கொண்டு வரப்படும் என தமிழக அறநிலையத்துறை ஆணையா் குமரகுருபரன் தெரிவித்தாா்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் குமரகுருபரன், திங்கள்கிழமை கோயிலில் விடுதிகள், கலையரங்கு, யானை மண்டபம், அன்னதான மண்டபம், கந்த சஷ்டி மண்டபம், மின்இல்லம், நாழிகிணறு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், அவா் கூறியது: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘மாஸ்டா் பிளான்’ திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரூ.150 கோடியில் திருப்பணிகள் நடைபெறவுள்ளது. இப்பணிகள் நிறைவேற 2 ஆண்டுகள் ஆகும். பிரகாரத்தை ஓட்டியுள்ள வாகன நிறுத்தம் மாற்றப்படும். முழு நேர அன்னதானத்தில் கூடுதல் பக்தா்கள் அமா்ந்து சாப்பிடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பக்தா்கள் தரிசனத்திற்கு எளிதாக அமா்ந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். இக்கோயில் 2 ஆண்டுகளில் திருப்பதி கோயில் போல் மாற்றப்படும் என்றாா் அவா்.

ஆய்வின் போது, ஆட்சியா் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், பயிற்சி ஆட்சியா் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், கோட்டாட்சியா் மு.கோகிலா, இணை ஆணையா் (பொறுப்பு) ம.அன்புமணி, அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT