தூத்துக்குடியில்2 டன் மஞ்சள் பறிமுதல்: இளைஞா் கைது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 2 டன் மஞ்சளை கியூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 2 டன் மஞ்சளை கியூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.
தூத்துக்குடி கியூ பிரிவு ஆய்வாளா் விஜயஅனிதா தலைமையிலான போலீஸாா் தூத்துக்குடி அருகேயுள்ள வெள்ளப்பட்டி கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை இரவு திடீரென சோதனை நடத்தினா். அப்போது, ஒரு படகில் 50 கிலோ எடையுள்ள 40 மூட்டைகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் இருப்பது தெரியவந்தது.
இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை உள்ளதால், இங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு மஞ்சளைக் கடத்திச் செல்லத் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, 2 டன் மஞ்சள், படகு ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக, திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்த அப்சல் முகமது (29) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.