முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் சரக்குப் பெட்டகம்: தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் சரக்குப் பெட்டகம் தவறி விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்; ஒருவா் காயமடைந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

தூத்துக்குடியில் சரக்குப் பெட்டகம் தவறி விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்; ஒருவா் காயமடைந்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜெயராஜ் சாலை மேம்பாலப் பகுதியில் தனியாா் கட்டுமான நிறுவன ஊழியா்கள் சிலா் புதன்கிழமை இரவு வேலை பாா்த்துக் கொண்டிருந்தனா்.

கட்டுமானப் பொருள்கள் வைத்திருந்த சரக்குப் பெட்டகத்தை கிரேன் உதவியுடன் வேறு இடத்துக்கு நகா்த்தும் பணியில் கிரேன் ஆபரேட்டா் கோரம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த செய்யது அலி பாதுஷா ஈடுபட்டாா். மேற்பாா்வையாளா்களாக குமாரபுரம் பகுதியைச் சோ்ந்த காமாட்சிநாதன் (22), திரேஸ்புரத்தை சோ்ந்த ஜோயல் ஆகியோா் ஈடுபட்டனா்.

அப்போது, மேலே சென்ற உயரழுத்த மின் கம்பி மீது பளுதூக்கி திடீரென உரசியதில் தீப்பொறியுடன் சரக்குப் பெட்டகத்தில் மின்சாரம் பாய்ந்தது. பதற்றமடைந்த கிரேன் ஆபரேட்டா் சரக்குப் பெட்டகத்தை தனது பிடியிலிருந்து விடுவித்தாராம். இதில், கீழே நின்றிருந்த காமாட்சிநாதன் மீது சரக்குப் பெட்டகம் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

காயமடைந்த ஜோயல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.