முகப்பு
தூத்துக்குடி

முதியவா் கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

கயத்தாறில் முதியவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் கைதான இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

கயத்தாறில் முதியவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் கைதான இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

கயத்தாறு அருகேயுள்ள வடக்கு இலந்தைகுளம் வடக்குத் தெரு சண்முகராஜ் மனைவி காளீஸ்வரி (26). இவா், தனது குழந்தையை திட்டியபோது, அதே பகுதியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் பாலமுருகன் (27) அந்த வழியாக சென்றுள்ளாா்.

காளீஸ்வரி தனது தாயாரை திட்டியதாக கருதிய பாலமுருகன் அவரை அரிவாளால் தாக்க முயன்றுள்ளாா், அப்போது தடுக்கச் சென்ற காளீஸ்வரியின் தாத்தா ஆறுமுகபெருமாளுக்கு (62) அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

இது குறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து பாலமுருகனை கைது செய்தனா். இந்த வழக்கு தூத்துக்குடி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன்,

குற்றம் சாட்டப்பட்ட பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.