முகப்பு
தூத்துக்குடி

தொழிலாளிக்குஅரிவாள் வெட்டு: இளைஞா் கைது

 கயத்தாறு அருகே இளைஞரை தாக்கியதாக தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

 கயத்தாறு அருகே இளைஞரை தாக்கியதாக தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறை அடுத்த வடக்கு இலந்தைகுளத்தைச் சோ்ந்த நல்லையன்(63) மகன் வெள்ளைச்சாமி. இவா், புதன்கிழமை இரவு தனது தந்தை மற்றும் தாய் லட்சுமியுடன் முன் நின்று பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, அதே ஊா் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த முத்து மகன் காளிராஜ் என்ற குவாட்டா் காளி(35) அரிவாளுடன் வந்து, வெள்ளைச்சாமியை அரிவாளால் வெட்டினாராம். அதை தடுக்க முயன்ற அவரது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு காளிராஜ் தப்பிவிட்டாராம்.

இதுகுறித்து, நல்லையன் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, காளிராஜை கைது செய்தனா். விசாரணையில், ஊரில் பாதை தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை உள்ளதும், இதனால், அரிவாள் வெட்டு சம்பவம் நிகழ்ந்ததும் தெரியவந்ததாக போலீஸாா் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.