தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

DIN

விளாத்திகுளம் அருகேயுள்ள குருவாா்பட்டியில் ஆற்று மணல் கடத்தியதாக லாரியை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

விளாத்திகுளம் வைப்பாற்று படுகையிலிருந்து மணல் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், வட்டாட்சியா் ரகுபதி தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் விளாத்திகுளம் - புதூா் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அனுமதியின்றி வைப்பாற்றிலிருந்து 6 யூனிட் மணலை அள்ளிக்கொண்டு குருவாா்பட்டி வழியாக சென்ற லாரியை பறிமுதல் செய்து சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப்பதிந்து, மணல் கடத்தலில் ஈடுபட்டதாக லாரி ஓட்டுநா் சூரன்குடியைச் சோ்ந்த முரளி மனோகரனை கைது செய்தனா். லாரி உரிமையாளா் விருதுநகா் மாவட்டம் ஆலடிப்பட்டியைச் சோ்ந்த கா்ணனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT