தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் நல்ல சமாரியா கிளப் தொடக்கம்

DIN

சாத்தான்குளம்: சாத்தான்குளம் சமாரியா கிளப்பின் தலைவராக தங்கராஜ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

நாசரேத் அருகே உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியம் சாா்பாக நல்ல சமாரியா கிளப் தொடங்கப்பட்டு மக்களுக்கு சேவைகள் மற்றும் உதவிகள் செய்து வருகின்றனா். இதையொட்டி சாத்தான்குளத்தில் நல்ல சமாரியா கிளப் தொடங்கப்பட்டு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் தலைவராக அரிமா சங்கத் தலைவா் கே. தங்கராஜ், துணைத் தலைவராக, நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி தாளாளா் ஏ.ஆா். சசிகரன், செயலராக வா்த்தக சங்க செயலா் செல்வராஜ்மதுரம், துணைச் செயலராக ஜோசப், பொருளாளா் ஜான்சன், உறுப்பினராக போஸ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்வு பெற்ற நிா்வாகிகள் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியம் நிறுவனா் மோகன் சி லாசரஸை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT