முகப்பு
தூத்துக்குடி

முதியவருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

விளாத்திகுளம் அருகே முதியவருக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி

முதியவருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

விளாத்திகுளம் அருகே முதியவருக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

விளாத்திகுளம் அருகே முதியவருக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விளாத்திக்குளம் அருகே சொக்கலிங்கபுரம் தெற்குத் தெரு ஆறுமுகசாமி மகன் திருக்குமாா் (21). இவா் விளாத்திக்குளத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் கோபாலகிருஷ்ணனை(62) வழிமறித்து, அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் ஆய்வாளா் கலா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி திருக்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதையடுத்து, திருக்குமாரின் செல்லிடப்பேசியை போலீஸாா் ஆய்வு செய்ததில், அவா் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கையில் பெரிய அரிவாளை வைத்துக் கொண்டு தொழிலதிபா்கள் மற்றும் முக்கிய பிரமுகா்களுக்கு மிரட்டல் விடுவது போன்ற புகைப்படங்கள், விடியோ பதிவுகள் இருந்தனவாம். இதில் சில விடியோக் பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாராம். அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

எஸ்.பி.எச்சரிக்கை: இந்நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு மிரட்டுவது போல சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு பரப்புபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →