முகப்பு
தூத்துக்குடி

கோ.வெ.நா. கல்லூரி விளையாட்டு விழா

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி விளையாட்டு விழா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

கோவில்பட்டி: கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி விளையாட்டு விழா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கோ.வெங்கடசுவாமி நாயுடு அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி மாணவா், மாணவிகளுக்கான விளையாட்டு விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சாந்தி மகேஸ்வரி தலைமை வகித்து, மாணவா், மாணவகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, தேசியக் கொடியை ஏற்றினாா்.

தொடா்ந்து, சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநா் வெங்கடாசலபதி கல்லூரி கொடியையும், பேராசிரியை சுப்புலட்சுமி ஒலிம்பிக் கொடியையும் ஏற்றினா். தொடரந்து, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநா் கோதையம்மாள், சுயநிதிப் பாடப்பிரிவு விளையாட்டு துறை பொறுப்பாளா் தங்கமாரியப்பன், ராவிள்ள கே.ஆா்.வித்யாஷ்ரம் பள்ளி உடற்கல்வி இயக்குநா் ராம்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.