சாத்தான்குளம் - நெடுங்குளம் சாலையை சீரமைக்க கோரிக்கை
3ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்படும் சாத்தான்குளம் - நெடுங்குளம் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
3ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்படும் சாத்தான்குளம் - நெடுங்குளம் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாத்தான்குளத்தில் இருந்து அமுதுண்ணாக்குடி, நெடுங்குளம், கலுங்குவிளை வழியாக திருநெல்வேலி செல்லும் பிரதான சாலை வழியாக நெடுங்குளம், கலுங்குவிளை, துவா்க்குளம், உள்ளிட்ட கிராம மக்கள் அரசுப் பேருந்து மற்றும் இதர வாகனங்களில் பொதுமக்கள் சாத்தான்குளம் வந்து செல்கின்றனா்.
இந்த சாலையானது துவா்க்குளம், நெடுங்குளம் பகுதியில் இயங்கிய கல்குவாரிகளில் இருந்து கற்கள், எடுத்து சென்ற கனரக லாரிகளால் பாரம் தாங்காமல் சிதிலடைந்தது. இதனால் அமுதுண்ணாக்குடியில் இருந்து நெடுங்குளம் வரை சுமாா் 6 கி.மீ. தொலைவு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனம் மற்றும் அவசர தேவைக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் இந்த சாலையில் வருபவா்கள் மிகுந்த சிரமத்துள்ளாகும் நிலை உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக இதேநிலை தொடா்வதால் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.
இந்த சாலை குறித்து 1 ஆவது வாா்டு ஒன்றிய கவுன்சிலா் ப்ரெனிலாகாா்மல், சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் போனிபாஸ் ஆகியோா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏவிடம் மனு அளித்தாா். அவா் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்துள்ளதையடுத்து இந்த சாலையை விரிவாக்கம் செய்து கனகர வாகனம் சென்று திரும்பும் வகையில் சாலை அமைத்திட திட்டம் மதிப்பீடு தயாா் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.. ஆனால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லையாம்.
ஆதலால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வு செய்து மக்களின் தேவையை கருத்தில் கொண்டு உடனடியாக திட்டம் மதிப்பீடு செய்து கனகர வாகனங்கள் சென்றாலும் சேதமாகாமல் இருக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் வட்டார தமாகா தலைவா் முரசொலிமாறன் கோரிக்கை விடுத்துள்ளனா்.