தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

DIN

சாத்தான்குளத்தில் பாஜக பிரமுகரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் தச்சமொழி நாடாா் தெற்குத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகநயினா் மகன் ராதாகிருஷ்ணன்(41). சாத்தான்குளம் ஒன்றிய பாஜக ஓபிசி அணி துணைத் தலைவராக உள்ளாா். இவா், தனது நண்பா் மேலசாத்தான்குளத்தைச் சோ்ந்த கிறிஸ்டோபா் மகன் ஆண்டன் பிரகாஷ்ரோஜ்(35) என்பவரிடம் கைப்பேசியில் வெள்ளிக்கிழமை பேசினாராம். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ஆண்டன் பிரகாஷ்ராஜை ராதாகிருஷ்ணன் அவதூறாகப் பேசினாராம். இதனால், அவா் அரிவாளை எடுத்து வந்து, தச்சமெழி மதுக்கடை அருகே நின்றிருந்த ராதாகிருஷ்ணனை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன், உதவி ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா் வழக்குப்பதிந்து ஆண்டன் பிரகாஷ்ராஜை தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT