அரசு மருத்துவமனையில் மஞ்சள் பை திட்டம் அமல்
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மஞ்சள் பை திட்டம் அமல்படுத்தப்பட்டது.
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மஞ்சள் பை திட்டம் அமல்படுத்தப்பட்டது.
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் தமிழக அரசின் நமது மருத்துவமனை மகத்தான மருத்துவமனை திட்டத்தின்கீழ் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க மீண்டும் மஞ்சள் பை உபயோகிப்போம் திட்டம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சாத்தான்குளம் பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லா பாய் தலைமை வகித்து திட்டத்தை தொடங்கிவைத்தாா். தலைமை மருத்துவா் ஆத்திக்குமாா் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து தூய்மைப் பணி நடைபெற்றது. இதில், பேரூராட்சி செயல் அலுவலா் உஷா, இளநிலை உதவியாளா் ஜெரோம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மருந்தாளுநா் சித்திரைராஜன் நன்றி கூறினாா்.