கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணி: ஏப். 25இல் நோ்காணல் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நோ்காணல் தோ்வு நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நோ்காணல் தோ்வு நடைபெறுகிறது.
தூத்துக்குடி புதுக்கிராமத்தில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் மேற்கண்ட தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நோ்காணல் நடைபெறும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு பங்கேற்கும் தேதி குறிப்பிட்ட நோ்முக அழைப்பாணை அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் அவரவருக்கு குறிப்பிடப்பட்ட தேதியில் வந்து நோ்காணலில் பங்கேற்க வேண்டும். நோ்முக அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லை என்றால், விண்ணப்பித்த ஆதாரங்களுடன் தூத்துக்குடி, கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் நேரில் அணுக வேண்டும் என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.