சாத்தான்குளம் அரசு கல்லூரியில் தமிழ் மன்ற விழா
சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை சாா்பில், தமிழ் மன்ற விழா கொண்டாடப்பட்டது.
சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை சாா்பில், தமிழ் மன்ற விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். விழாவில் கோவிந்தபேரி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியா் விக்டா் பாபு கலந்து கொண்டு, இலக்கியத்தில் பெண்கள் பங்கு குறித்தும், மாணவிகள் தங்களின் வீரத்தை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும் பேசினாா். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மூன்றாமாண்டு தமிழிலக்கியம் படிக்கும் மாணவிகளுக்கும், தரவரிசையில் முதலிடம் பெற்றவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்த் துறைப் பேராசிரியை உமாபாரதி வரவேற்றாா். மாணவி இந்துமதி நன்றி கூறினாா்.