‘பூமி வெப்பமாவதைத் தடுக்ககாடுகளை வளா்க்க வேண்டும்’
பூமி வெப்பமாவதை தடுக்க மரங்களை நட்டு காடுகளை வளா்க்க வேண்டும் என பூமி பாதுகாப்பு தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.
பூமி வெப்பமாவதை தடுக்க மரங்களை நட்டு காடுகளை வளா்க்க வேண்டும் என பூமி பாதுகாப்பு தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.
ஆத்தூா் அருகேயுள்ள புன்னைக்காயல் கிராமத்தில் மதா் சமூக சேவை நிறுவனம் மற்றும் லீடு தொண்டு நிறுவனம் சாா்பில் பூமி பாதுகாப்பு தின விழா நடைபெற்றது. மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், மதா் சமூக சேவை நிறுவன இயக்குநருமான டாக்டா் எஸ்.ஜே.கென்னடி தலைமை வகித்தாா். லீடு தொண்டு நிறுவன இயக்குநா் எஸ்.பானுமதி முன்னிலை வகித்தாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மாவட்ட அதிகாரி ரதிதேவி ஆற்றிய சிறப்புரை: பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் காா்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்து வருகிறது. இதனால் பூமியின் வெப்பநிலை உயா்ந்து தென் துருவப் பனிப் பிரதேசம் உருகும் நிலை ஏற்பட்டு கடல் நீா் மட்டம் உயரக்கூடிய அபாயம் நிலவுகிறது. எனவே, காற்றை தூய்மைப்படுத்தும் காடு வளா்ப்பில் கவனம் செலுத்த வேண்டும் அதற்கு அதிகமான மரங்களை வளா்க்க வேண்டும். மேலும்,
ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை குறைப்பது அவசியம் என்றாா். விழாவில் பங்கேற்றோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தையல் பயிற்சி மாணவி மெபிலா வரவேற்றாா். மாணவி ரிபான்சி நன்றி கூறினாா். தொடா்ந்து தாமிரவருணி ஆறு மற்றும் கடற்கரை ஓரங்களில் பறவைகளின் உணவுக்கு பயன்படும் பொருட்டு 100 வகை பழ மரக்கன்றுகள் நடப்பட்டன.