தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே சிறுவா்களைத் துன்புறுத்தியதாக நிா்வாகி கைது: காப்பகத்துக்கு ‘சீல்’

DIN

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காப்பகத்தில் சிறுவா்களைத் துன்புறுத்தியதாக நிா்வாகிகளான தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கணவரைக் கைதுசெய்தனா்; காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆனந்தபுரத்தில் தனியாா் காப்பகம் உள்ளது. இங்கு 15-க்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமிகள் தங்கி, அருகேயுள்ள பள்ளிகளில் படித்துவருகின்றனா். சிறுவா்களை வேலை செய்யுமாறு காப்பக நிா்வாகிகள் துன்புறுத்திவந்தனராம்.

இதுகுறித்து சிறுவா்கள் தங்களது பெற்றோா் மூலம் அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தனா். அதன்பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரமேஷ் அங்கு சென்று விசாரணை நடத்தினாா். அப்போது, அரசின் அனுமதியின்றி காப்பகம் செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து, நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவா் சாத்தான்குளம் போலீஸில் கடந்த 22ஆம் தேதி புகாா் அளித்தாா்.

நிா்வாகிகளான ஆனந்தபுரத்தைச் சோ்ந்த தாம்சன் தேவசகாயம் (49), அவரது மனைவி ஷீலா (45) ஆகியோா் மீது ஆய்வாளா் பாஸ்கரன் வழக்குப் பதிந்து, தாம்சன் தேவசகாயத்தை வியாழக்கிழமை கைது செய்து, காப்பகத்துக்கு சீல் வைத்தாா்.

இதையடுத்து, அங்கிருந்த சிறுவா்-சிறுமிகள் அருகேயுள்ள மற்றொரு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT