தூத்துக்குடி: தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் (71). இவர் உள்ளிட்ட 22 பேருக்கு குளத்தூர் பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ச்சியாக மனு அளித்தும் தகுந்த நடவடிக்கை எடுக்காத நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பையும் மீறி நாகேந்திரன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதைத்தொடர்ந்து காவல்துறை அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை கைப்பற்றி அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.