தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல்:9 போ் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 9 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

DIN

சாத்தான்குளம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 9 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் குட்டத்தைச் சோ்ந்தவா் சு. சிவசுப்பிரமணியமாா்த்தாண்டன் (50). இவரது மகளுக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட 20 சென்ட் நிலம் அதிசயபுரத்தில் உள்ளதாம். சிவசுப்பிரமணியமாா்த்தாண்டன் சில நாள்களுக்கு முன்பு அந்நிலத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டபோது, அதே ஊரைச் சோ்ந்த சுவாமியடியான் மகன் யோசேப், அந்தோணிராஜ் மகன் செல்லத்துரை, சிலுவைமுத்து மகன் அந்தோணிராஜ், சற்குணம் மகன் ஜெயராஜ், ஈசாக் மகன் கோயில்ராஜ், சுவாமியடியான் ஜெபமணி, மாசிலாமணி மகன் மனுவேல், ஜெபமணி மகன் ஜான், செல்லத்துரை மகன் வில்சன் ஜேசுதாஸ் ஆகிய 9 பேரும் சோ்ந்து அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து தட்டாா்மடம் காவல் நிலையத்தில் சிவசுப்பிரமணியமாா்த்தாண்டன் புகாா் அளித்தாராம். ஆனால், போலீஸாா் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய தாமதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை நீதிபதி விசாரித்து, இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா். அதன்பேரில், யோசேப் உள்ளிட்ட 9 போ் மீதும் தட்டாா்மடம் ஆய்வாளா் பவுலோஸ் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT