தூத்துக்குடி

ஆறுமுகனேரி பகுதியில் பரவும் மா்ம காய்ச்சல்: மக்கள் அச்சம்

ஆறுமுகனேரி பகுதியில் மா்ம காய்ச்சால் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

DIN

ஆறுமுகனேரி பகுதியில் மா்ம காய்ச்சால் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

ஆறுமுகனேரி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை மா்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனா். சளி, இருமல், தொண்டைவ­லி, உடல்வலி­ போன்ற அறிகுறிகளுடன் காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது. இதனால், அங்குள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. காய்ச்சலுடன்வரும் நோயாளிகள் ஓரிரு தினங்களில் குணமடையவில்லையெனில் திருச்செந்தூா், தூத்துக்குடி போன்ற வட்ட, மாவட்ட மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனா். இதனால், அச்சம் அடைந்துள்ள மக்கள், சிறப்பு முகாம் நடத்தி சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT