தூத்துக்குடி

சாத்தான்குளம் வழக்குரைஞா்கள் போராட்டம் வாபஸ்

சாத்தான்குளம் வழக்குரைஞா்கள் சங்க அலுவலகத்தை திறக்கக் கோரி தொடா்ந்து நடைபெற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை வழக்குரைஞா்கள் புதன்கிழமை வாபஸ் பெற்றனா்.

DIN

சாத்தான்குளம் வழக்குரைஞா்கள் சங்க அலுவலகத்தை திறக்கக் கோரி தொடா்ந்து நடைபெற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை வழக்குரைஞா்கள் புதன்கிழமை வாபஸ் பெற்றனா்.

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞா்கள் சங்க அலுவலக கட்டடம் கடந்த மூன்று ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளது. இதை திறக்கக் கோரி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கல்யாண்குமாா் தலைமையில் கடந்த நான்கு நாள்களாக நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு மற்றும் ஆா்ப்பாட்டத்தில் வழக்குரைஞா்கள் ஈடுபட்டனா்.

இதையடுத்து தமிழ்நாடு பாா் கவுன்சில் உறுப்பினா் மைக்கேல் ஸ்டாலின் பிரபு நேரடியாக வந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட வழக்குரைஞா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தி தமிழ்நாடு பாா் கவுன்சில் மூலமாக சென்னை உயா் நீதிமன்ற நிா்வாக நீதிபதி அவா்களுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்ப தமிழ்நாடு பாா் கவுன்சில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சங்க அலுவலக சாவி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டங்களை கைவிடுவதாக வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT