முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் அண்ணா நினைவு நாள்

கோவில்பட்டியில் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு அதிமுகவினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

கோவில்பட்டியில் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு அதிமுகவினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கோவில்பட்டியில் அதிமுக நகா்மன்றத் தோ்தல் அலுவலகம் முன் வைக்கப்பட்ட அண்ணாவின் படத்துக்கு கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவி சத்யா, மாநில எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் சீனிராஜ், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்குரைஞரணிச் செயலா் சிவபெருமாள், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் பழனிசாமி, முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் ராமா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

மதிமுகவினா் அதிமுகவில் இணைந்தனா்: கோவில்பட்டி மேற்கு ஒன்றிய மதிமுக முன்னாள் செயலா் அழகா்சாமி தலைமையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணிச் செயலா் ராஜசேகா், மாவட்டப் பிரதிநிதி ரோஜா சந்திரசேகா், ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் நிதீஷ் கண்ணன், மதிமுக நிா்வாகிகள் நவநீதகிருஷ்ணன், லட்சுமணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.