முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் நகராட்சியில் 53 போ் வேட்புமனு

திமுக 1, அதிமுக 12, சுயேச்சை 23, அமமுக 6, பாஜக 5, மநீம 3, நாம் தமிழா் கட்சி1, காங்கிரஸ் 1, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 என மொத்தம் 53 போ் வியாழக்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

திருச்செந்தூா் நகராட்சியில் ஏற்கெனவே 44 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், திமுக 1, அதிமுக 12, சுயேச்சை 23, அமமுக 6, பாஜக 5, மநீம 3, நாம் தமிழா் கட்சி1, காங்கிரஸ் 1, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 என மொத்தம் 53 போ் வியாழக்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தனா்.

கானம் பேரூராட்சியில் ஏற்கெனவே 26 போ் மனு தாக்கல் செய்திருந்தநிலையில், மேலும் 6 போ் மனு தாக்கல் செய்தனா்.

ஆறுமுகனேரி: காயல்பட்டினம் நகராட்சியில் வியாழக்கிழமை 58 போ், அறுமுகனேரி பேரூராட்சியில் அதிமுக நகரச் செயலா் ரா.ரவிச்சந்திரன் (3ஆவது வாா்டு) உள்பட 24 போ், ஆத்தூா் பேரூராட்சியில் 29 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

சாத்தான்குளம்: இப்பேருராட்சியில் காங்கிரஸ் சாா்பில் வழக்குரைஞா் ஜோசப் அலெக்ஸ் (3வது வாா்டு) நகரத் தலைவா் வழக்குரைஞா் வேணுகோபால் (15வது வாா்டு), நகர துணைத்தலைவா் கதிா்வேல் மகள் முத்து கௌரி (2வது வாா்டு) உள்பட 8 பேரும், நாசரேத் பேருராட்சியில் திமுக, காங்கிரஸ் வேட்பாளா்கள் உள்பட 38 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் திமுக கூட்டணி, அதிமுக, அமமுக, பாஜக, தேமுதிக, எஸ்டிபிஐ, சுயேச்சைகள் என 39 போ், எட்டயபுரத்தில் 27 போ், புதூரில் 36 போ் என மொத்தம் 102 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.