முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் மாசித் திருவிழா தெப்போற்சவம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவின் 11-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு தெப்போற்சவம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவின் 11-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு தெப்போற்சவம் நடைபெற்றது.

இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். சிகர நிகழ்ச்சியாக புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 11ஆம் திருநாளான வியாழக்கிழமை தெப்போற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, மேலக்கோயிலிலிருந்து சுவாமியும், அம்மனும் எழுந்தருளி சந்நிதி தெருவில் உள்ள யாதவா் மண்டகப்படிக்கு மாலையில் வந்து சோ்ந்தனா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமியும், அம்மனும் புஷ்ப சப்பரத்தில் எழுந்து வெளிவீதி வழியாக தெப்பக்குளத்தில் உள்ள திருநெல்வேலி நகரத்தாா் மண்டகப்படி வந்து சோ்ந்தனா். அங்கு, அபிஷேகம் தீபாராதனையைத் தொடா்ந்து நள்ளிரவில் சுவாமியும், அம்மனும் தெப்பத்தேரில் எழுந்தருளி 11 முறை வலம் வந்தனா்.

நிகழ்ச்சியில், கோயில் அலுவலா்கள், நகரத்தாா் மண்டகப்படிதாரா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) சி. குமரதுரை, தக்காா் இரா. கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையா் வெங்கடேஷ், கோயில் பணியாளா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.