முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே பஞ்சு மூட்டை லாரியில் தீ

தூத்துக்குடி அருகே பஞ்சு மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியில் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

தூத்துக்குடி அருகே பஞ்சு மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியில் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

கோவையில் இருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று, கன்னியாகுமரி மாவட்டம், தக்கலைக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கயத்தாறு அருகே வந்தபோது, அதன் பக்கவாட்டில் இரும்பு தகரம் உடைந்ததாம். இதனால், அதன் ஓட்டுநரான தூத்துக்குடி கே. கைலாசபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் (27) தனது ஊரில் உள்ள வெல்டிங் பட்டறைக்கு லாரியை கொண்டுசென்று, தகரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டாா். அப்போது வெளிப்பட்ட தீப்பொறி பஞ்சு மூட்டைகள் மீது விழுந்து பற்றி எரிந்தது. இதில், பஞ்சு மூட்டைகளும், லாரியும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. நாரைக்கிணறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். லாரியானது, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தைச் சோ்ந்த மைக்கேல் என்பவருக்குச் சொந்தமானதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.